எடப்பாடியின் புதிய ஒப்பந்தம்!

தமிழகத்தின் அடுத்த டிஜிபி, தலைமைச் செயலாளர் நியமன விவகாரத்தில் தமிழக முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு பற்றி ஏற்கனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம். இதன்படி தமிழ்நாட்டின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதியையும், தலைமைச் செயலாளராகத் தற்போது ஆளுநர் மாளிகையின் தலைமைச் செயலாளராக இருக்கும் ராஜகோபாலையும் நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தன. இப்படி டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய தமிழக அரசின் இரு முக்கிய அதிகார மையங்களையும் பாஜக தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கைகள் முன்னைவிட இன்னும் இறுக்கமாகக் கட்டப்பட்டுவிடும். டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய இருவரையும் தன் கையில் வைத்திருக்காவிட்டால் முதல்வர் என்ற பதவிக்கே அர்த்தம் இருக்காது என அதிகாரிகள் தரப்பில் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டது. “டிஜிபி, தலைமைச் செயலாளர் என இரு முக்கியப் பதவிகளையும் மத்திய அரசின் விருப்பத்தின் பேரிலேயே நியமித்தால் மாநில அளவில் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டாக வேண்டும். எனவே டிஜிபி நியமனத்தில் மத்திய அரசின் விருப்பமும், தலைமைச் செயலாளர் நியமனத்தில் மாநில அரசின் விருப்பமும் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று மத்திய அரசிடம் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து தலைமைச் செயலாளரை முதல்வர் எடப்பாடியின் சாய்ஸில் விட்டுவிடுவது என்று முடிவாகியிருக்கிறது. இதன்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இப்போது நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகம் நியமிக்கப்படலாம்" என்கிறார்கள் அரசு வட்டாரங்களில்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.