தமிழரசின் காங்கேசன்துறை தொகுதி புதிய நிர்வாகிகள் தெரிவாகினார்கள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு வட்டாரக் கிளைகள், தொகுதிக் கிளைகள், மாவட்டக்கிளைகள் தெரிவுகள் இடம்பெற்று நாளை பொதுச்சபைகூடி மத்தியகுழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட இருக்கின்றார்கள்.

அந்தவகையில் காங்கேசன்துறைத் தொகுதியின் தொகுதிக்கிளைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவும், செயலாளராக வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தனும், பொருளாளராக வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜூம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் 15 பேர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.