வார்த்தைகளில் வேண்டாம் வசீகரம் தோழி...!

தேடினாள் அவள்..
நான் வாராதபோது...
இறைஞ்சவுமில்லை
இளகவுமில்லை அவள்...

நேசகுடுவைக்குள் பாசங்களை
ஒளித்தே வைத்துள்ளாள்...
அனுபவங்கள் நிறைந்த களஞ்சியமாய்...

அடுக்கிவைத்த பிரியங்களை அவள் எடுத்துச்சொல்லவுமில்லை..
இருந்தும் நானறிந்துகொண்டேன்
இலைமறைகாயாய் அவள் இனிமைகளை..

பிரியபயிர் வளர்ப்பதற்காய் நம்பிக்கையை விதைத்தே வைத்துள்ளாள்

இருக்கட்டும் இருக்கட்டும்
வார்த்தைகளில் வேண்டாம் வசீகரம் தோழி...!
வாழ்ந்துக்காட்டுவோம் வஞ்சித்தோர் வாயடைத்துச்செல்ல...!!
-சபானா-
28.06.2019
Powered by Blogger.