வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா – சீனா இணக்கம்!!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் விரிவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில், வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ள அரசியல் தலைவர்கள் அங்கு சென்றுள்ளதுடன், முக்கிய நாட்டுத் தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகளவில் பார்க்கப்பட்டது.

இச்சந்திப்புக்கு பின்னர் சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சீனாவும், அமெரிக்காவும் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் இரு நாடுகளும் இந்த பேச்சுவார்த்தையை தொடரும். சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக மோதல் நீடித்தது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது. சீனாவும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. இருநாடுகளும் இவ்வாறு மோதிக்கொண்டமை உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் இந்த சமரசப் போக்கு உலகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.