Smart Lamp Poles தொடர்பில் பல முறைப்பாடுகள்!!

Smart Lamp Poles தொடர்பிலான ஒப்பந்தத்தின் b பகுதியில் 2 வது பந்தியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சூழல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி சபை , தொலைத்தொடர்பு அதிகார சபை, விமானப்போக்குவரத்து அதிகாரசபை, பிரதேச சுகாதர அதிகாரி ஆகியோரிடமும் அனுமதி பெற்று அதன் பிரதிகள் ஆவணப்படுத்தலுக்காக மாநகர சபையில் சமர்ப்பிக்கவேண்டும் என்றுள்ளது.
இன்று கிடைத்த ஒரு தகவலின் படி நகர அபிவிருத்தி சபையில் (UDA) இது தொடர்பில் எந்தவித அனுமதியும் இது வரை பெறப்பட வில்லை என்று அறியமுடிகின்றது,

அத்துடன் யாழ்.இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை அருகில் கஸ்தூரியார் வீதி மற்றும் நல்லூர் செட்டித் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட குறித்து Smart Lamp Poles தொடர்பில்  அப்பகுதி மக்கள் UDA இல் முறைபாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக அனுமதி பெறவேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 6 அதிகார சபைகளில் நகர அபிவிருத்தி அதிகார சபையில் எதுவித அனுமதியும் பெறப்படவில்லை என்பது தெரியவருகின்றது எனவே ஏனையவற்றில் ஆவது அனுமதி பெறப்பட்டதா என்று தெரியவில்லை. அங்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது தகவல் அறியும் சட்டம் மூலம் கோரப்பட்டுள்ளது.

Smart Lamp Poles தொடர்பில் பல தரப்புக்களிடம் இருந்தும் சர்ச்சையான கருத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்ற நிலையில் இது தொடர்பில் யாழ்.மாநகர சபை நிர்வாகம் மக்களுக்கு ஏன் சரியான தெளிவுபடுத்தல்களை வழங்காமல் தொடர்ந்தும் மௌனம்  காக்கின்றது என்ற வினாவும் எழாமல் இல்லை . அதே நேரம் இது தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தபட வேண்டிய தேவை உள்ள நிலையில் யாழ்.மாநகர கௌரவ முதல்வர் இன்று அமெரிக்கா பயணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.