கட்டுநாயக்காவில் நகை கடத்திய தம்பதியர் கைது!!
இலங்கைக்கு ரூபா இரண்டரைக் கோடி மதிப்புள்ள நகைகளை கடத்த முயன்ற சிங்கப்பூர் தம்பதியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் முன்னணி அந்நிய செலாவணி நிறுவனத்தின் உரிமையாளர்கள் என சுங்க செய்தித் தொடர்பாளர் லால் வீரக்கோன்ன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
45 மற்றும் 55 வயதுடைய சந்தேக நபர்கள் இந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு ஆறுமுறை பயணங்களை மேற்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர்கள் தங்கள் துணிகளுக்குள் 4.8 கிலோகிராம் எடையுள்ள நகைகளை மறைத்து வைத்திருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை நெக்லஸ் மற்றும் பதக்கங்கள்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இவர்கள் தொடர்பாக சுங்கப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததாகவும் அந்த தகவலின் அடிப்படையிலேயே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை