இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்க வலயநாடுகள் சில இணக்கம்!!

இலங்கைக்கு பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ள சில வலய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.


சட்டத்தை அமுல்படுத்தும் ஒத்துழைப்பிற்கான ஜகார்த்தா மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த பயங்கரவாத ஒழிப்பு மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதன்போதே இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

இந்த பயங்கரவாத ஒழிப்பு மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, பயங்கரவாத தடுப்பு பிரிவு, அரச புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பயங்கரவாத தடுப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு வலய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில், பயங்கரவாத தடுப்பு, புலனாய்வுச் சேவை, சைஃபர் குற்றம், நிதி மோசடி உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.