புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள்!!

புத்தளம் மாவட்டத்தின் இரண்டு பிரதேசங்களின் கடற்கரைப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுவ நிர்மலபுர கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சடலமும், ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துபந்தி கடற்கரையில் இருந்து மற்றொருவரின் சடலமும் கரை ஒதுங்கியுள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளங்காண முடியாத வகையில் சிதைவடைந்துள்ளன. அதில் நுரைச்சோலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் உடலில் காணப்பட்ட தடயப் பொருட்களை  ஆராய்ந்ததில் இந்திய நாட்டவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீதிவான் விசாரனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸாரும் புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துபந்தி கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் வௌிநாட்டவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு இரு சடலங்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.