Smart கம்பங்கள் ஊடாக 5G அலைக்கற்றை வழங்கப்படாது..!

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட  மற்றும் ஏனைய இடங்களில் பொருத்தப்படும் Smart lamp pole கம்பங்களில் 5G அலைக்கற்றை இந்த கம்பங்களினூடாக வழங்கப்பட போவதில்லை  என யாழ்.மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.


இன்று யாழ்.மாநகர சபையில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார் இதன்போது அவர் தெரிவித்தார்.

இந்த Smart கம்பங்கள் தொடர்பில் சிலர் மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்கள் ஏற்படுத்தி மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வருவதாகவும், 5G அலைக்கற்றை Smart கம்பங்கள் ஊடாக வழங்கப்படோவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

போரால் உடைந்துபோன மக்களுக்கு ஓர்  ஆறுதல் இருக்கம் நிலையில்    யாழ்.மாநகரத்தை எழில்மிகு நகரமாக கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லா முன்னெடுப்புக்கும் தடையாக உள்ளது.

தற்போது இது ஒருவருடத்துக்கு பிறகு முறைப்படி சபையில் உத்தியோகபூர்வ சபையில் அறிவிக்கப்பட்டு மேறகொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை இந்த திட்டம் நடைபெறாது அதனை முறியடிப்பதற்காக கங்கனம்கட்டி கம்பங்கள் இருக்கும் இடங்களில் உள்ள மக்களுக்கு பிழையான , பிறள்வான சிந்தனைகள் குழப்பங்களை ஏற்படுத்தி அதனை எதிர்க்க செய்கின்றனர்-என்றார்.

இதேவேளை இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், இந்த  அலைக்கற்றை கம்பம்  நிறுவப்படுவதற்கு, அப்பகுதி மக்கள், இன்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். கம்பம் பொருத்த வந்தவர்களை திருப்பி அனுப்பியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.