என்று மாறும் தமிழன் தலைவிதி?

விசாரித்து காலையில் அனுப்பி விடுகிறோம் என்று கூட்டிச் சென்றவர்கள் 29 வருடமாக விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.


தன் மகனின் விடுதலைக்காக 29 வருடங்களாக நடந்து நடந்து களைத்துபோன தாய் வேறு வழியின்றி தன் மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கேட்கிறார்.

நடிகர் சஞ்சய் தத்தை விடுதலை செய்த இந்திய அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய மறுக்கிறது.

ஆனால் தமிழர்களோ ராஜராஜசோழ மன்னன் தாழ்த்தப்பட்டவர்களின் நிலத்தைப் பறித்தானா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழனின் இந்த தலைவிதி மாறுமா?

Powered by Blogger.