துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

குருதுகஹஹெடேக்ம – அனுறுத்தகம பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனுறுத்தகம பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.