பிரான்சில் வரலாற்றுப் புகழ் மிக்க நோர்மன்டி தரையிறக்கத்தின் 75ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள்!!

இடம்பெற்றுள்ளன.( இரண்டாம் உலக யுத்தத்தின் தலைவிதியை மாற்றிய டி டே )

டி  டே தரையிறக்கத்தின்  75வருடத்தினை நினைவுகூறும் நிகழ்வுகள் நேற்றும் இன்றும்  இடம்பெறவுள்ளன.பிரிட்டிஸ் மகாராணி உட்பட உலகின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்கள்.


டி டே என்பது என்ன?

அமெரிக்க பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படையினர் 1944 யூன் 6 ம் திகதி பிரான்சின் கரையோரப்பகுதியில் நிலைகொண்டிருந்த ஜேர்மனிய படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.அதுவரை முயற்சிக்கப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையாக அது காணப்பட்டது.
வடமேற்கு ஐரோப்பாவை ஜேர்மனிய படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாகவும் அது காணப்பட்டது.
நோர்மன்டியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான படையினர் ஒரே நேரத்தில் தரையிறங்குவதற்கான திட்டம் காணப்பட்டது.ஒரு வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடல்களை யூன் ஐந்தாம் திகதி நடைமுறைப்படுத்துவது
என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும்,புயல்கள் காரணமாக யூன் 6 ம் திகதி நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

முதல் நாள் நடவடிக்கைகளிற்கு சூட்டப்பட்ட பெயரே டி- டே

அந்த நாளில் என்ன நடந்தது?

அதிகாலையில் ஜேர்மனிய படையினரின் முன்னரங்கிற்கு அப்பால் பரசூட் மூலம் படையினர் தரையிறக்கப்பட்டனர். அதேவேளை நோர்மன்டி கரையோரத்தில் தாக்குதலிற்காக ஆயிரக்கணக்கான  கப்பல்கள் தயாரான நிலையிலிருந்தன.
இவ்வாறான நடவடிக்கையை  ஜேர்மனிய தலைவர்கள் எதிர்பார்த்தபோதிலும் இது கவனத்தை திசைதிரும்பும் நடவடிக்கையாகவே இது அமையும் என அவர்கள் கருதினார்கள்.ஜேர்மனிய தலைவர்கள் தாக்குதல் வேறு இடத்தில் இடம்பெறவுள்ளது என நம்பவைப்பதற்கான தந்திரோபாயநகர்வுகளும் இடம்பெற்றிருந்தன.இது பிரிட்டிஸ் படையினர் ஜேர்மனிய படையினர் எதிர்பாரத தருணத்தில் கோல்ட் என்ற சங்கேத பாசையில் அழைக்கப்பட்ட கடலோர பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உதவியாக அமைந்தது.
அமெரிக்க படையினர் உயிரிழப்புகள் எதுவுமின்றி உட்டாவில் தரையிறங்கினர்.
ஆனால் அருகிலுள்ள ஒமேகா பீச்சில் அமெரிக்க படையினர் கடும்  உயிரிழப்புகளை சந்தித்தனர்.ஜேர்மனிய படையினரின் பாதுகாப்பு நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட விமான மற்றும் கடற்படை தாக்குதல்கள் பயனற்றவையாக மாறின.இதுதவிர அமெரிக்க படையினர் மீது ஜேர்மனியின் விசேட படைப்பிரிவொன்று தாக்குதலை மேற்கொண்டது.எனினும் நள்ளிரவிற்கு பின்னர் அமெரிக்க பிரிட்டிஸ் படைப்பிரிவுகளை சேர்ந்த 23000 படையினர் கடலோரபகுதிகளை பக்கவாட்டில் கைப்பற்றினர்.6.30 முதல் கடற்படையின் விமானதாக்குதல்களிற்கு மத்தியில் ஐந்து தாக்குதல் படையணிகள் கடலோர பகுதியில் தரையிறக்கப்பட்டன.
அன்றைய தினம் முழுவதும் படையினர் கடலோர பகுதிகளில் தரையிறங்கினார்கள்.நோர்மன்டி கடலோரத்தின் ஐந்து கடற்கரை பகுதிகளில் 156.000 படையினரையும்,10,000 வாகனங்களையும் 7000 கப்பல்கள் தரையிறக்கின.விமானப்படையினரினதும் கடற்படையினரினதும் கடுமையான தாக்குதல்கள் இன்றி இந்த நடவடிக்கை சாத்தியமாகியிராது.ஆனால் டி டேயில் மாத்திரம் நேசநாட்டு படையினர் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.9000 பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல்போயினர்.
4000 முதல் 9000 ஜேர்மனிய படையினர் கொல்லப்பட்டனர் என்ற மதிப்பீடுகள் காணப்படுகின்றன.

டி டேயிற்கு பின்னர் என்ன நடந்தது

டி டேயன்று நேசநாடுகளின் படையினர் பிரான்ஸில் காலடி எடுத்துவைத்தபோதிலும் அவர்கள் மீண்டும் பின்னோக்கி கடலிற்குள் செல்லநிர்ப்பந்திக்கப்படும் அபாயம் காணப்பட்டது.ஜேர்மனிய படையினர் தங்களை பலப்படுத்துவதற்கு முன்னர் தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டிய நிலையில் நேசநாட்டு படையினர் காணப்பட்டனர்.குறுகிய பாதைகளால் முன்னேற வேண்டியிருந்ததன் காரணமாகவும் ஜேர்மனிய படையினர் நோர்மன்டியை கடுமையாக பாதுகாக்க முயன்றதாலும்  முன்னேற்றம் மெதுவானதாகவே காணப்பட்டது.எனினும் எதிரியை விட எண்ணிக்கையில் அதிகமாக காணப்பட்டதாலும் திறமையான வான்படை காரணமாகவும் நேசநாட்டு படையினர் கடும் உயிரிழப்புகளின் மத்தியில் எதிர்ப்புகளை முறியடித்தனர்.அவர்கள் 1944 ஆகஸ்டில் பாரிசை விடுவித்தவேளை பாரிசை சென்றடைந்த இரண்டு மில்லியன் நேசநாட்டு படையினரில் பத்து வீதமானவர்கள் உயிரிழந்திருந்தனர்.

Powered by Blogger.