நான் சசிகலா, தினகரனுக்குச் சொந்தமாக இருக்கலாம்-கருணாஸ்!!

வருகிற 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணிக்கு ஆதரவு கேட்டு திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் இன்று நாமக்கல்லில் உள்ள சங்க உறுப்பினர்களிடம் வாக்கு சேகரிக்க வந்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், `பாண்டவர் அணி சிறப்பாக பணியாற்றி கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிப்படி நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி வருகின்றது. நாங்கள் மீண்டும் இதில் போட்டியிடுகின்றோம். மணல் கொள்ளை சம்பவத்தில் மோகன் என்பவரை கொலை செய்துள்ளனர். இதற்கு அமைச்சர் மணிகண்டன்தான் காரணம் என்று கூறுகின்றனர். அமைச்சர் மணிகண்டன் தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாகவும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகமும் செய்துகொண்டிருக்கிறார்.

திருவாடனை தொகுதியின் எம்.எல்.ஏ ஆன என்னை அரசு சார்பில் எந்த விழாவுக்கும் அழைப்பதில்லை. இன்று எனது தொகுதிக்கு உட்பட்ட  அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு என்னை முறைப்படி அழைக்கவில்லை. அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் என்னை தொகுதிக்கு வராமல் தடுக்கிறார். மாவட்ட கலெக்டரும், அதிகாரிகளும் என்னை மதிப்பதில்லை.

எனக்கு சசிகலா, தினகரன் ஆகியோர் சொந்தக்காரர்களாக இருக்கலாம். என்னை சட்டமன்ற உறுப்பினராகவே மட்டுமே அரசு பார்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதியான நான் அரசுக்கு எதிராக செயல்படுகிறேனா. மொழியை ஏற்பது வேறு, திணிப்பது வேறு. ஒரு மொழிக்கு இணைப்பு மொழி தேவை. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. இந்நிலையில் 3-வது மொழி இந்தி எதற்கு?' என்று கேள்வி எழுப்பினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.