மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்!

முதன் முதலில் பிரசாரத்தை தொடங்கிய மதுரை மாவட்டம் பாலமேடு அருகேயுள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலுக்கு இன்று காலை வருகை தந்தவர், அய்யனாருக்கு நன்றி தெரிவித்து வேண்டிக்கொண்டு அங்கிருந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்க கிளம்பினார். அவருடன் புறநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ-க்கள் சோழவந்தான் மாணிக்கம், உசிலம்பட்டி நீதிபதி, மேலூர் பெரியபுள்ளான், மதுரை தெற்கு சரவணன் ஆகியோர் உடன் வந்தனர்.வலையபட்டி, சத்திரவெள்ளாளபட்டி என சோழவந்தான் தொகுதியிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நூறு நாள் வேலைக்குச் செல்லும் மக்களை வரவேற்க அழைத்து வந்திருந்தனர். ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் எம்.பி ரவீந்திரநாத் குமார். குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த புதிய எம்.பி. ரவீந்திரநாத்குமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

``மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் பேசி தீர்த்து வைப்பேன். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வகுத்த வியூகத்தினால் பெரும் வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக மக்களின் நன்மைக்காக  நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். நியூட்ரினோ திட்டம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதற்குப் பின்னர் தெரிவிக்கிறேன். மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வரும், துணை முதல்வரும்  முடிவெடுப்பார்கள்' என்று பட்டும் படாமல் பேசிவிட்டு நன்றி தெரிவிக்கும் நிகழ்வைத் தொடர்ந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.