மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்!

தேனி மாவட்டம் மட்டுமல்ல, தென் தமிழகத்தில் கண்டமனூர் ஜமீனை தெரியாதவர்கள் இல்லை எனலாம். பெரும் பரப்பளவில் ஆட்சி செய்த ஜமீன்களில் ஒன்றான கண்டமனூர் ஜமீனின் சொத்துகள் அனைத்தும் சுதந்திரத்துக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரி ஒழிப்பு முறைக்குப் பின்னர் அரசுடைமையாக்கப்பட்டது.
இந்த நிலையில், தாங்கள்தான் கண்டமனூர் ஜமீனின் வாரிசுகள் என கூறிக்கொண்டு விவசாய நிலங்களை மிரட்டிப் பிடுங்கும் மோசடிக் கும்பல் ஒன்று தேனியில் உலாவிக் கொண்டிருப்பதாக வேதனையோடு கூறும் விவசாயிகள், அந்த மோசடிக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியில், சத்திரபட்டி வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நம்மிடம் பேசிய சத்திரப்பட்டி வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கருப்பசாமி, ``அரசே ஜமீன்தாரி முறையை ஒழித்தாலும், தாங்கள்தான் ஜமீன் வாரிசுகள் என கூறிக்கொண்டு சிலர் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயிகளை மிரட்டிவருகிறார்கள். அரசு அதிகாரிகள், தாசில்தார்களை கையில் வைத்துக்கொண்டு போலியான வாரிசு சான்றிதழ் மற்றும் போலி பட்டா தயாரித்துக்கொண்டு விவசாய நிலத்துக்குள் வந்து கற்களை நட்டு `இது ஜமீன் சொத்து, கண்டமனூர் ஜமீன் வாரிசுகள் நாங்கள்' எனக் கூறிக்கொண்டு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அபகரிக்கிறார்கள். இந்த மோசடிக் கும்பல் மீது பல இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டும் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது. சத்திரப்பட்டி வாய்க்கால் பாசன சங்கம் சார்பாக, பி.சி.பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம். எப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள்.


மொத்தம் 98 ஏக்கர் நஞ்சை நிலத்தை ஜமீன் சொத்து என்கிறார்கள். எல்லாம் போலி பட்டா, போலிச் சான்றிதழ்கள். இவர்களுக்கு யார் யார் உதவுகிறார்கள், எந்த அரசு அலுவலர்கள், அதிகாரிகள் இவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என மாவட்ட கலெக்டர் தீவிர விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இந்த மோசடிக் கும்பலுக்கு தேனியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகி ஒருவர் பண, அதிகார உதவிகளைச் செய்துகொண்டிருப்பதாகவும், அவரின் ஆதரவோடுதான் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த மோசடிக் கும்பல், அப்பாவிகளின் நிலங்களை மிரட்டிப் பிடுங்கிக்கொண்டிருப்பதாகவும் கூறும் விவசாயிகள், அதிகாரிகளும், காவல்துறையும் அமைதியாகத் தான் இருப்பார்கள். ஏனென்றால் நிறைய பணம் வாங்கிவிட்டார்கள் அல்லவா. எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை எடுத்துச்சென்று மோசடிக் கும்பலுக்கு தக்கத் தண்டனை வாங்கிக்கொடுப்போம்'' என்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது எப்போதும் போல அமைதி காக்குமா?
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.