பிரதமர் மோடியின் வருகை குறித்து உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ கருத்து!


இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை பிரதமர் மோடியின் விஜயம் எடுத்துரைக்கின்றது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் விஜயம் குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து வெளிநாட்டு தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது உலக நாடுகளுக்கு ஒரு செய்தியை “இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை” கூறுகின்றது என அவர் தெரிவித்தார். மேலும் அவரது விஜயத்தை உள்நாட்டில், ஒற்றுமை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விடயமாக பார்க்கிறோம் என்றும் கூறினார். அத்தோடு இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை உயர்த்தும் செயற்பாடாக இந்த விஜயம் அமைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
Powered by Blogger.