புலனாய்வுப் பிரிவினரை அழைப்பதை அனுமதிக்க முடியாது!!


நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணைகளில் புலனாய்வுப் பிரிவினரை அழைப்பதை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, புலனாய்வுப் பிரிவினரை அழைப்பதையும், தகவல்களை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதையும் தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.