ஆடைக்கு நாள் குறித்த படக்குழு!

விவாதத்துக்கு உண்டான அமலா பால் நடித்த ஆடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேயாத மான் படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் படம் ஆடை. இந்தப் படத்தில் அமலா பால் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள த்ரில்லர் ஜானர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் காமினி என்னும் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் டீசர் வைரலானது. ஆடையில்லாமல் இதன் டீசரில் தோன்றும் அமலா பாலின் காட்சியினால் விஜய் சேதுபதியுடன் நடித்துக் கொண்டிருந்த படத்திலிருந்து அமலா பால் நீக்கப்பட்டார்.

ஆணாதிக்க மனநிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் நடந்துகொள்வது தமிழ்த் திரையுலகிற்கு நல்லதல்ல என்ற அமலா பாலின் அறிக்கை விவாதப் பொருளானது.

 இந்த நிலையில் ஆடை படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஜூலை 19 என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. விரைவில் இதன் ட்ரெய்லரும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


 அமலா பால், ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். பிரதீப்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை வீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

No comments

Powered by Blogger.