அவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள்!!📷

அவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள் மாத்திரமே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவுஸ்திரேலியாவின் உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அவர்களில் 43 பேர் நவுறு தீவிலும், 15 பேர் பப்புவா நியுகினியிலும் உள்ளனர்.

அதேநேரம் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்கின்ற எந்த நபரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு படகு மூலம் பிரவேசிக்கின்ற இலங்கையர்கள், உடனடியாக இலங்கை அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.