சுற்றாடல் பாதுகாப்பிற்கான தீர்மானங்கள் மீளப்பெறப்பட மாட்டாது!!

மணல், கல் மற்றும் மண் வியாபாரம் இலங்கையில் மிக மோசமான ஊழல் துறைகளாக முன்னெடுக்கப்படுவதுடன் அவற்றில் இடம்பெறும் முறைக்கேடுகளை தடுப்பதற்காக பல சட்டதிட்டங்களை தான் கடந்த 04 ஆண்டுகளாக பரிந்துரைத்தாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (22) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற “பசுமை மணல் தரிப்பிடம்” எனும் எண்ணக்கருவை அறிமுகம் செய்யும் நிகழ்வின்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி  மரங்களை வெட்டுதல், சட்டவிரோத கல், மணல், மண் அகழ்வு காரணமாக ஏற்படும் பாரிய சுற்றாடல் அழிவை தடுப்பதற்கு பல சட்டதிட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தபோதும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அந்த தீர்மானங்களில் எந்த மாற்றமும் ஏற்படாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அபிவிருத்தி பணிகளுக்காக கல், மணல், மண் போன்றவை தேவையாக இருந்தாலும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் சரியான முகாமைத்துவத்தின் கீழ் அவற்றை பெற்றுக்கொள்வதின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி புதிய தொழிநுட்ப வழிமுறைகளுடன் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதின் முக்கியத்துவத்தையும் தெளிவூட்டினார்.

“பசுமை மணல் துறைமுகம்” எண்ணக்கருவின் கீழ் ஆறும் ஆற்றங்கரையும் அதை அண்மித்த சூழலும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்கமைய ஆற்றங்கரையின் 10 அடி வரையிலான பிரதேசம் பசுமை வலயமாக அடையாளப்படுத்தப்படுவதுடன், அப்பிரதேசத்தில் காடு வளர்ப்பு மேற்கொள்ளப்படும். அதனூடாக மணல் துறைமுகத்திற்கு மூன்று அடி அளவிலான பாதை பாதுகாக்கப்படும்.

இந்த திட்டத்தின் காரணமாக ஆற்றுக்குள் டெக்டர்களை இறக்க முடியாததுடன்இ மணல் அகழ்வின்போது உரிய சட்டங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த திட்டத்தினால் 10 அடி தூரம் வரை கூடைகளை பயன்படுத்தி மணலை கொண்டு செல்ல நேரிடும். மணல் அகழ்விற்காக பயன்படுத்தும் படகுகள், எஞ்சின் பொருத்தாதவைகளாக இருக்க வேண்டும்.

 தற்போது பசுமை மணல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அதை நடைமுறைப்படுத்தாத நபர்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்காதிருப்பதற்கும் சட்டத்தை பின்பற்றாத நபர்களின் அனுமதி பத்திரங்களை ரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென புவியியல் ஆராய்ச்சி மற்றும் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மன்னம்பிட்டிய மணல் அகழ்வு ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்துமாறும் ஜனாதிபதி உரிய தொழிநுட்ப சேவைகள் சங்கத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்போது அந்த ஊழியர்களுக்கு சந்தன மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

பொலன்னறுவை நகரபிதா சானக்க சிதத் ரணசிங்க, புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.