உங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க!!
ஞானிகளின் கருத்துப்படி பிறக்கின்ற அனைத்து மனிதர்களுமே நல்ல குணங்களோடு தான் பிறக்கின்றனர். எனினும் அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் தீய மனிதர்களின் சகவாசம் போன்றவை அவர்களிடம் பல்வேறு தீய குணங்களை உருவாக்கிவிடுகின்றன. நமது வாழ்விலும் நமக்கு நெருக்கமான மனிதர்களின் பொறாமைகள், எதிர்ப்புகள் மற்றும் கண் திருஷ்டிகள் ஆகியவற்றை நாம் அறிந்திருப்போம். இவை எல்லாவற்றையும் போக்கி நமக்கு நன்மைகள் ஏற்படுத்தும் ஒரு எளிய பரிகார முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம். பலர் வாழ்க்கைக்கு தேவையான பொருள் ஈட்ட தொழில், வியாபாரங்கள் செய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நஷ்டங்களை ஏற்படுத்த சக தொழில் வியாபார போட்டியாளர்கள் பல மறைமுகமான சதி வேலைகளை செய்கின்றனர்.
மேலும் நமது வாழ்க்கையின் தேவைக்காக வீடு, வாகனம் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது நமது நெருக்கமான உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் பொறாமை பார்வை மற்றும் கண்திருஷ்டிகளுக்கு ஆளாக நேர்கிறது.
சக்திதேவி எனப்படும் அம்மன் வழிபாடு நமக்கு ஏற்படும் எத்தகைய தீய பாதிப்புகளையும் உடனடியாக நீக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்தில் வருகின்ற ஏதேனும் ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தில், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற ஏதேனும் ஒரு அம்பாள் கோயிலில் இருக்கின்ற அம்பாள் விக்கிரகத்திற்கோ அல்லது துர்க்கை அம்மன் கோயிலில் இருக்கும் துர்க்கை அம்மன் விக்கிரகத்திற்கோ சிகப்பு நிற புடவையை சாற்றி வழிபடுவதால் வெகு சீக்கிரத்தில் உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க என்ற ஒரு எளிய பரிகாரமாக இருக்கிறது.

இந்த எளிய பரிகாரத்தை செய்பவர்களுக்கு தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் கண் திருஷ்டிகள் நீங்கி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மேன்மை உண்டாகும். உங்களையும் உங்கள் வீட்டையும் எந்த ஒரு துஷ்ட சக்திகளும் அண்டாதவாறு காக்கும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை