வவுனியா வடக்கு நெடுங்கேணியில் ராணுவ வாகனம் மோதி குடும்பஸ்தர் பலி!!📷

இரண்டு மணி நேரத்திற்கு முன் வவுனியா வடக்கு நெடுங்கேணி பாடசாலை முன்னால் ராணுவ வாகனம் மோதி சேனைப்பில வைச்சேர்ந்த பேரம்பலம் என்னும் குடும்பஸ்தர் பலி.

முல்லைத்தீவிலிருந்து வந்த றக் ரக வாகனம் எதிரே பாடசாலை முன்னால் துவிச்சக்கர வண்டியில்  திரும்ப முற்பட்ட  மேற்படி குடும்பஸ்தரை மஞ்சள்கோடு தாண்டி மோதித்தள்ளியதில் குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 300மீற்றர் தொலைவில் கடந்தவாரம் பெரும்பான்மையினத்தவரின் எல்வ் ரக வாகனம் மோதியதில் நெடுங்கேணி ஓட்டோ உரிமையாளர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments

Powered by Blogger.