பைன் மரங்களை அகற்றி உள்நாட்டு வன வளர்ப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!!📷.

கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட துனுமடலாவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலுள்ள பைன் மரங்களை அகற்றி அதற்கு பதிலாக அங்கு உள்நாட்டு வன வளர்ப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (06) அப்பிரதேசத்தில் இடம்பெற்றது.


தூய்மையான பசுமை நகரைக் கட்டியெழுப்பி, உயிர்ப்பல்வகைமையை பாதுகாக்கும் துரு பிரஜாவ எனும் பெயரில் இச்செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதனை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதி அவர்கள் அங்கு இலுப்பை மரக்கன்றொன்றினை நாட்டினார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மாத்தளை நகர பிதா டல்ஜித் அலுவிகார, கண்டி நகர பிரதி மேயர் இலானி ஆப்தீன், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Powered by Blogger.