ஐ. நா மனித உரிமைகள் சபையின் 41வது கூட்டத்தொடரில் தமிழின அழிப்பு நாள் நினைவுகூறல்!!📷

ஐ. நா மனித உரிமைகள் சபையின் 41வது கூட்டத்தொடர் 14 யூன் 2019 அன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 12 யூலை 2019 வரை இடம்பெறவிருக்கின்ற இக் கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழர் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கெதிராகக் குரல்கொடுத்து வருகின்றனர்.


அந்தவகையில் மனித உரிமைகள் தளத்தில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும்  அமைப்புக்களுடன் இணைந்து பல பக்கவறை நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது. அதன் ஒருகட்டமாக முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவுதினம் 25 யூன் 2019 அன்று புதன்கிழமை நினைவுகூறப்பட்டது. பி.ப 16.30 ஆரம்பமாகிய இந் நிகழ்வின் தொடக்கமாக, நிகழ்வில்  கலந்துகொண்ட பல்வேறு இனத்தவர்களால்  தமிழின அழிப்பு நினைவுப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஈகைச் சுடர்களும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் தமிழர் இயக்கம் சார்பாக கலந்துகொண்ட பேச்சாளர்களால் இனவழிப்பு இடம்பெற்று பத்தாண்டுகளில் தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும், வடமாகாண சபையின் தீர்மானத்தின் சுருக்கம் மற்றும்  முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளில் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

மேலும் எம்மைப் போன்று உரிமைக்காக போராடும் பல்வேறு இனங்களுடன் இணைந்து கீழ் வரும் தலைப்புகளில் பக்கவறை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்தும் இடம்பெற இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவுதினம் ( Remembrance of 10th Anniversary of Mullivaikal Genocide )
25 யூன் 2019 , பி.ப 16:30 - 17:30, Room : XV

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ( Enforced Disappearance )
26 யூன் 2019 , மு.ப 9:00 - 10:00, Room : XV

மோதல்களின் பின்னரான மனித உரிமைகள் ( Post Conflict and Human Rights )
26 யூன் 2019 , பி.ப 17:00 - 18:00 , Room : XV

இராணுவ அடக்குமுறையின் கீழ் பெண்கள் ( Women Under Occupation )
28 யூன் 2019 , பி.ப 13:00  - 14:00 , Room : XV

 பாரிய அட்டூழியங்கள் மற்றும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் ( mass atrocities and Responsibility to protect )
28 யூன் 2019 , பி.ப 15:30 - 16:30 , Room XV

சுயநிர்ணய உரிமை ( Right to self-determination ) 1 யூலை 2019 , பி.ப 15:00 – 16:00 , Room: XV

சிறீலங்காவில் மனித உரிமைகள் ( Human Rights in Sri Lanka )
2 யூலை 2019 , மு.ப  11:00 – 12:00 , Room : XV

பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு ( Women human rights defenders'
protection )
3 யூலை 2019 , பி.ப 15:30 – 16:30 , Room : VIII


இனவழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ( Genocide and crimes against humanity )
5 யூலை 2019 , மு.ப 12:30 – 13:30 , Room IX

அகதிகளின் மனித உரிமைகள் ( Refugees’
human rights )
8 யூலை 2019 , மு.ப 15:00 – 16:00 , Room XXVII

காணாமலாக்கப்படுதலும் தண்டனைகளிலிருந்து தப்பித்தலும் ( Impunity and disappearances )
8 யூலை 2019 , பி.ப 16:00 – 17:00, Room IX

இம்முறை இடம்பெறும் கூட்டத்தொடரின் சிறப்பம்சமாக; ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16 மாணவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களில் எமது பிரதிநிதிகள் கலந்துகொண்டு  தமிழர்களின் பிரச்சினைகள், அவர்களிற்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் இயக்கமாக நாம் எச் சந்தர்ப்பத்திலும் எம் தாய்த் தமிழ் உறவுகளுடன் கைகோர்த்து நிற்போம் என்பதையும், சர்வதேச அரங்குகளில் தமிழர்களின் குரலாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்போம் என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கின்றோம்


No comments

Powered by Blogger.