சென்னையில் ஆடு திருட வந்த கும்பலுக்கு நேர்ந்த சோகம்!!📷

சென்னை அம்பத்தூர் புதூர் பகுதியில் ஆடு, மாடுகளைத் திருட ஆட்டோவில் வந்த கும்பல், பொதுமக்களிடம் சிக்கியது.


சென்னை அம்பத்தூர் புதூர் பகுதியில் ஆடு, மாடுகள் அடிக்கடி திருடப்பட்டன. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோவில் மூன்று பேர் வந்தனர். அவர்கள்மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். அவரைப் பிடித்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். 

 இதற்கிடையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர். தொடர்ந்து அந்த நபரையும் ஆட்டோவையும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி விசாரணை நடத்தினார். விசாரணையில்,  ஒப்படைக்கப்பட்டவர் பெயர் கான் என்றும், ஓட்டேரியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர், புதூர் பகுதியில் ஆடுகள், மாடுகளைத் திருடி கறிக்கடைகளில் விற்றுவந்ததும் விசாரணையில் தெரிந்தது. கானுடன் வந்தவர்கள் பாபு, சேகர் என்று தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து புதூர் பகுதி மக்கள் கூறுகையில், ``எங்கள் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் திருட்டு போய்விட்டன. ஆடு மாடுகள் திருட்டு குறித்து புகார் கொடுத்தால் அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.  நாங்களே ஆடு,மாடு திருடர்கள் குறித்து ரகசியமாக விசாரித்துவந்தோம். இந்தச் சமயத்தில்தான், ஆட்டோவில் வந்த மூன்று பேர் கன்றுக்குட்டியை  திருடி ஏற்ற முயன்றனர். இதனால் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்தோம். ஒருவர் மட்டும் எங்களிடம் சிக்கினார். அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.

போலீஸார் கூறுகையில், ``பொதுமக்களிடம் சிக்கிய கான் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளோம். கானிடம் விசாரித்தபோது கன்றுக்குட்டிகள், ஆடுகளைத் திருடி விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை மூன்று பேரும் பங்கிட்டுள்ளனர். தப்பி ஓடிய இருவரையும் தேடிவருகிறோம்" என்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.