ஜீப்பில் சிம்புவுடன் ஊர் சுற்றும் ஹன்சிகா!

கடந்த 2015ம் ஆண்டு வெளியான வாலு படத்தில் சிம்பு-ஹன்சிகா இணைந்து நடித்துத்திருந்தனர். அந்த படத்தின் மூலம் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தாக கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்களின் காதல் தோல்வியில் முடிந்தது.


அதைத்தொடர்ந்து இருவரும் சந்தித்து கொள்ளாமல், தங்களின் படங்களில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்தனர். இதற்கிடையில் பல ஹிட் படங்களை கொடுத்த ஹன்சிகா, சிறிது காலமாக பட வாய்ப்புகள் இன்றி தனது மார்க்கெட்டை இழந்துள்ளார்.
 

அதையடுத்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மஹா. அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கிவரும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதில் ஹன்சிகாவுடன் இணைந்து சிம்பு நடித்து  வருவதாக கூறி சில புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஜீப்பில் செல்வது போல் உள்ள காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.