ஆனந்த ஊஞ்சல்!!

சாமந்திப் பூவை அள்ளி
தேசம் காண வாசம் வீசி
மல்லுவேட்டி காற்றில் மோதிப் பறக்க
காடு மேடு எல்லாம் காதல் சிந்தி வாறான்
கலாபக் காதல் நாயகன் !

மாராப்பு மனசைத்தான்
மனம்கோர்த்த மணவாளன்
தெவிட்டாத தேனாமிர்த சிரிப்பூற்றில்
தேகம் எல்லாம் தோய்ந்து வாறான்
தேரழகுத் தென்னவன் !

செவ்விளநீர் மேனி தாங்கி
தடைகளெல்லாம் தானே மென்று
தனயனவனை  ஊஞ்சல் கட்டி
இராஜசோழ நடை நிமிர்ந்து வாறான்
கார் மேகக் கலையவன் !

தாரமவள் தனிமை கொன்று
தாரகையின் ஒளிராய் நின்று
தன்னவளும் ஒய்யாரவண்டி ஓட்டிவர
எட்டுத் திக்கும் ஓசை முழங்கி வாறான்
கரும்புத் தேன் இனியவன் !

வார்தை முட்டும் பாசக் காரன்
வானம் வணங்கும் நேசக்காரன்
மஞ்சிமம் கொஞ்சும் தேகக்காரன்
மங்கையர் மனம் தேடும்  மாயக்காரன்
என்னவனும் இவன் இனமான அன்புக்காரன்!!!

- ஜெயவவா அன்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.