சாதனை படைத்த தாக்குதல் “கொண்டச்சி” முகாம் தகர்ப்பு நாள்!!

வட தமிழீழம் எழில் கொஞ்சும் அல்லிராணி கோட்டையையும் தமிழர் பாரம்பரிய வரலாற்றையும் கொண்ட மன்னார் மாவட்டத்தில் "கஜு வத்தை" என்று சிங்கள பெயர் கொண்டு அழைக்கப்பட்டும் சிங்களவர்களை குடியேற்றப்பட்டும் 100ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகை பண்ணையில் அமைந்திருந்ததே "கொண்டச்சி" முகாம்.


இந்த சிங்கள முகாம் மீட்புக்காகவும் தமிழர்கள் உரிமையை வென்று எடுக்கவும் 21/06/1990 அன்று விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. சுமார் 2மணிநேரம் நடைபெற்ற தாக்குதலின் பின்னர் முகாம் கைப்பற்றப்பட்டது. அங்கு தென்னாப்பிரிக்கா நாட்டில் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த இராணுவ "பவள்" கவசஙண்டி ஒன்றும் 24 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த வீரத்தாக்குதலில் 2ஆம் லெப்டினன்ட் கிறிஸ்டின், மேஜர் வசந்த், கப்டன் தனபால், லெப்டினன்ட் கோபிநாத், லெப்டினன்ட் சுப்ரமணி, வீரவேங்கை பிக்கன்ஸ், வீரவேங்கை சுபித்திரன், வீரவேங்கை சாந்தா, வீரவேங்கை வீரவேங்கை பஞ்சன்,வீரவேங்கை வீரவேங்கை மேனன், வீரவேங்கை ரமணி,வீரவேங்கை குவேந்திரன் உட்பட 12 வீரரக்ள் வீரகாவியம் அடைந்தார்கள்.

இன்றையதினம் ஈழவிடுதலைக்காக வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.

மூலம்:- விடுதலைப்புலிகள் இதழ்

No comments

Powered by Blogger.