குரங்கு மனிதர்கள்

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்று சொல்லும் போது அப்ப குரங்குகள் எப்படி இன்னும் வாழ்கின்றன என்ற தர்க்கக் கேள்வியுமுண்டு.


அதே சமயம் பரிநாம வளர்ச்சி பெற்றவர் மறுபடியும் குரங்குகளாக மாட்டார்களா என்ற கேள்வியுமுண்டு

அடுத்து தோற்றத்தில் மனிதர்களானாலும்
செயற்பாட்டில் குரங்குகளாக இருக்கமாட்டார்களா என்ற கேள்வியும் எழுகின்றது

அந்தக் கேள்விக்கான பதிலை நாம் நாளும் காண நேரிடுகின்றது

ஆம் வன்னியில் சில பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்களுக்கு குரங்கு இரத்தம் ஓடுவது வேதனை அளிக்கிறது

குறித்த சில அதிபர் ஆசிரியர்கள் வன்னி இறுதி யுத்த காலப்பகுதிக்கு முன்னர்

விடுதலைப் புலிகளின் நாடகங்களில் சினிமாக்களில் நடித்தவர்கள் சிலர் எழுத்தாளர்களாக விடுதலை சார்பாகவும் எழுதியவர்கள்

இவர்களின் இந்தச் செயற்பாட்டினால் ஈர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான பால்மணம் மாறாத பிஞ்சுகள் போராட்டத்தில் இணைந்தனர்

பலர் இறந்தும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுமுள்ளனர்

ஆனால் அன்று நடிகர்களாகவும் எழுத்தாளர்காளாகவும் தம்மை வெளிப்படுத்திய அந்த அதிபர்களும் ஆசிரியர்களும் இன்று தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு ஆமியை அழைக்கின்றனர்

வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு ஆமிமாமா என்று சொல்லிக் கொடுக்கின்றனர்

சிலர் ஆமிமாமாக்கு திருநீறு பொட்டு வைத்து விடுகின்றனர்

அப்படியாயின் இவர்களின் பேச்சை நம்பிய அந்த பால்மணம் மாறாத பிஞ்சுகளின் ஆத்மா இவர்களை மன்னிக்குமா?

இல்லை

அப்படி இவர்கள் செய்யும் தவறுதான் என்ன

முதலில் உயிருடன் வாழ்தல்

இரண்டாவது குரங்கு ரத்தத்தில் வாழ்தல்

மூன்றது கல்வியியலாளர்களாக வாழ்தல்

நான்கு அப்பாவிப் பிள்ளைகளை வைத்து வியாபாரம் செய்தல்

ஐந்து ஆமிமாமாவுக்கு சாமரம் வீசல்

ஆறு இவர்களுக்கும் பிள்ளையிருக்கு என்னதை மறத்தல்

குறிப்பு-கல்வியைக் கொச்சப்படுத்தக் கூடாது ஆகையால் அவர்களின் படம் இடப்படவில்லை குரங்கு இரத்தம் அதிகரிப்பதைப் பொறுத்து படமும் வேறு சில லீலைகளும் வெளிவரும்

No comments

Powered by Blogger.