ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 3 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள வியாழேந்திரன்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக   மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன்  பதிவு  செய்துள்ளார்.


இன்று(12) பிற்பகல் 3,30 மணியளவில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறித்த முறைப்படினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.

ஒன்று ஓட்டமாவடியிலிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காளிகோயிலை உடைத்து காளிகோயில் காணியில் ஹிஸ்புல்லா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பாவித்து மீன் சந்தை கட்டியமை , தனக்குச் சார்பாக தீர்ப்பு சொல்லாத நீதிபதியை இடம்  மாற்றி தனக்கு சார்பான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதியமை,

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு நடைபெற்ற மறுநாள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில்   பாசிக்குடா விடுதியில் இருந்த மூன்று அரேபியர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாட் டை விட்டு வெளியேற்றியமை அதில் ஒருவர் விசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட குற்ற சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.