முல்லைத்தீவில் விபத்து – இருவர் காயம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 9.15 மணியளவில் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி எரு ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிக்குள் தடம்புரண்டமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன் காரணமாக லொறியில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகி ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை