தமிழர்கள் கனவான்கள் என்பதை விற்றுவிடாதீர்கள்!!

தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனத்தின் பகை என்பது தமிழர்களின் கல்வி அறிவியல் எழுச்சியாலும் நேர்மையான நிர்வாகத்திறனாலும் ஏற்பட்டதாகும்.

அதாவது ஒரு காலத்தில் இலங்கையின் அரசாட்சி நிர்வாகத்திலும் உயர் பதவிகளிலும் தமிழர்களே கோலோச்சினர்.

இதுதவிர, வடபுலத்துத் தமிழ் மாணவர்கள் கல்வியில் உச்சமடைந்திருந்தனர்.

இலங்கையின் மூளை என்று போற்றுமளவுக்கு யாழ்ப்பாணம் மிளிர்ந்திருந்தது.

இதன்காரணமாக சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள அரசியல்வாதிகளும் இயல்பாகத் தமிழர்கள் மீது பொறாமை கொண்டனர்.

பெரும்பான்மை இனமாகத் தாங்கள் இருந்த போதிலும் சிறுபான்மைத் தமிழ் மக்களே அரச நிர்வாகங்களில் கோலோச்சுகின்றனர் என்பதும் திறமை அடிப்படையில் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்கின்றனர் என்பதாலும் பகை கொண்ட சிங்களத் தரப்பு, கல்வியில் தரப்படுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களை ஓரங்கட்டுதல் என தமிழ் இனத்துக்கு எதிரான சதிவேலைகளை முன்னெடுத்தது.

இதுதவிர, காலத்துக்குக் காலம் இனக்கல வரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களைக் கொன் றொழிப்பதும் தமிழர்களின் பொருளாதாரத்தைச் சூறையாடுவதும் வழமையாயிற்று.

எனினும் தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் போன்றவர்களின் அறிவாற் றலுக்கும் நேர்மைக்கும் அவர்களின் தமிழ் இனப் பற்றுக்கும் முன்னால், சிங்களப் பேரின வாதம் மண்டியிடவேண்டியதாயிற்று.

ஆம், தந்தை செல்வநாயகம் பாராளுமன்றுக்குள் நுழையும்போது ஆசனத்தில் இருக்கக் கூடிய சிங்களத் தலைவர்கள் எழுந்து நின்று அவருக்கு மதிப்பளித்த வரலாறுகள் தமிழ் இனத்தின் கனவான்தனத்துக்குத் தக்க சான்றாகும்.

எனினும் தமிழ் மக்களுக்கு ஒரு கதையும் அரசாங்கத்துக்கு இன்னொரு கதையும் கூறிக்கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்துகின்ற இன்றைய தமிழ் அரசியல் தலைமை தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள அரசியல்வாதிகளும் மதிப்பிடுவர் என்பது ஏற்புடைய உண்மை.

இருந்தும் தமிழ் இனத்தின் கனவான்தனத்துக்கு இன்னமும் இழுக்கு ஏற்படவில்லை என்பதால், அந்தவொரு மதிப்பையேனும் நம் தமிழ் அரசியல்வாதிகள் காப்பாற்ற வேண்டும்.

ஆக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காகத் தனக்குக் கிடைத்த வாசஸ்தலத்தை யும் வாகனங்களையும் உடனடியாக மீள ஒப்படைக்க வேண்டும்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்­ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது; தனக்குரிய வாசஸ்தலத்தையும் இரண்டு வாகனங்களையும் இரா.சம்பந்தர் தன்னுடன் வைத்திருக்கிறார் என்று கூறுகிறார் எனில்,

அது தமிழினத்தின் நேர்மைக்கு இழுக் கைத் தரும் என்பதுடன் இரா.சம்பந்தர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை விரும்பியதே இதற் காகத்தான் என்ற கணிப்பீடு தானாக ஏற்பட்டு விடும்.

ஆகவே, தமிழினத்தின் உரிமையை விற்றுப் பிழைத்தது போல தமிழினத்தின் கன வான்தனத்தையும் விற்று விடாமல், உரியவற்றை உடனடியாக ஒப்படைப்பதே உத்தம காரியமாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.