சிலோன்கார நாய்களும் -பிக் பாஸும்..!!
சிலோன் கார நாய்கள் ..
சொன்னவர் கமலஹாசன் ..
சம்பவம் .....எண்பதுகளின் ஆரம்பம் கமல் சினிமாவில் உச்சத்துக்கு போயிருந்த காலம் ..அப்போ இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்கு சுற்றுலா போயிருந்த எம்மவர் சிலர் சில நடிகர்களையும் சந்தித்து படமெடுத்துவிட்டு கமலஹாசனையும் சந்திக்க அவரை சந்திக்க வீட்டுக்கு போயிருக்கிறார்கள் .வாசலில் நின்ற காவலாளி உள்ளே விடவில்லை சதம் கேட்டு வெளியே வந்த கமல் என்ன பிரச்சனையென்று கேட்டிருக்கிறார் ..
சிலோன் கார்கள் உங்களை பார்க்கணுமாம் படமெடுக்கனுமாம் அடம் பிடிக்கிறார்கள் என்றிருக்கிறார் .சிலோன்கார நாய்களா அவங்களை உள்ளே விடவேணாம் அடித்து துரத்தி விடு .என்று விட்டு உள்ளே போய் விடவே ..அவர் சொன்னதை கேட்டு பார்க்கப்போயிருந்தவர்களில் கோபமடைந்த ஒருவன் கல்லை எடுத்து வீட்டின் மீது ஏறிய போலிஸ் வந்து அவர்களை துரத்தியது என்கிற விடயம் பின்னர் ராணி இதழில் ஒரு பெட்டி செய்தாகவும் வந்திருந்தது ..
பின்னர் அதே கமலஹாசன் ஈழத் தமிழ் பேசுகிறேன் என்று தென்னாலியில் எதோ பேசி நடித்தும் ..நாங்கள் இத்தனை பேர் பக்கத்திலிருந்தும் முள்ளிவாய்க்கால் அழிவை தடுக்க முடியவில்லையே என்று பேட்டிகள் கொடுத்தும் நடந்த விடயங்கள் ..
சிலோன் கார நாய்கள் ..
சொன்னவர் பாரதிராஜா ..
சம்பவம் ..இதுவும் எண்பதுகளின் ஆரம்பம் தான் நம்ம ஊர் காரன் ஒருவன் போராட்டம் என்று இந்தியா போய் புளொட் அமைப்பில் சேர்ந்து பயிற்ச்சி எடுத்து விட்டு பின்னர் இயக்க உள் குழப்பத்தால் அதை விட்டு விலகி சினிமா எடுக்கும் ஆசையில் பாரதிராஜா விடம் உதவியாளராக சேர்ந்திருந்தான் ..படப்பிடிப்பின்போது கோபம் வந்தால்நடிகர் நடிகைகளை கூட அடித்துவிடும் பழக்கம் கொண்டவர் அவர் என்பது தமிழ் சினிமாவுக்கே தெரிந்த விடயம் அப்போ உதவியாளர்களை சும்மா விடுவாரா ..
அவரும் பழக்க தோசத்தில் நம்மாள் மேலை கையை வைக்க அவனோ அவரை போட்டு புரட்டி எடுத்து விட்டான் .அந்த சிலோன் கார நாயை அடித்து துரத் துங்கடா என்று அவர் கத்த அவன் எப்படியோ தப்பியோடி வந்து விட்டான் ..அதுக்கு பிறகு அவர் ஒரு சிலோன் தமிழரையும் உதவியாளாராக சேர்த்ததேயில்லை ...பின்னர் காலப்போக்கில் அவர் வன்னி போய் பிரபாகரனை சந்தித்ததும் வெளி நாடுகளுக்கு வந்து போராட்டம் பற்றி ஈழத் தமிழர்களுக்கு வகுப்பெடுத்ததும் நடந்த விடயங்கள் ..
சிலோன் கார நாய்கள் ..
சொன்னவர் கங்கை அமரன் ..
சம்பவம் .ராஜீவ் காந்தி கொலை நடந்து முடிந்த பின்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த சிலோன் கார நாய்களால் தான் இவ்வளவு பிரச்னை இங்கிருந்து அனைவரையும் துரத்தவேண்டும் என்று சொல்லியிருந்தார் ..பின்னர் அவர் வீட்டை ஜெயலலிதா பறித்து அவரை ஊரை விட்டே துரத்தியதும் பயந்துகொண்டு லண்டனில் ஓடி வந்து பலகாலம் பதுங்கியிருந்தவருக்கு மேடை நிகழ்வுகளும் தொலைக்காட்சி நிகழ்சிகளும் கொடுத்து வாழ்வளித்தவர்கள் சிலோன்கார நாய்களே ..
இதனை ஏன் சொல்கிறேனென்றால் கோடம்பாக்கம் என்பது எப்போதுமே ஈழத் தமிழர்களுக்கு கைக்கெட்டாத ஒரு அற்புத விளக்கு ..அதில் விதிவிலக்கை விரல் விட்டு எண்ணலாம் .கோடம்பாக்கத்தில் கொடிகட்டிப்பறந்த பாலு மகேந்திராவே தான் ஈழத் தமிழன் என்பதை மறைத்து அல்லது மறந்து தான் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் ..தங்கள் கற்பனைகளோடும் திறமைகளோடும் எதையாவது சாதித்து விடலாமென நாய்களாகவே அதை சுற்றி வலம் வந்து வாழ்கையை முடித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் ..
ஆனால் 90 களின் இறுதிதான் கோடம்பாக்கமே ஈழத் தமிழர்களை தேடி வர ஆரம்பித்தது.. காரணம் திறமைக்காக அல்ல வணிகத்துக்காக ..தமிழ் நாட்டில் நலிந்துபோன சினிமா அடுத்த கட்டத்துக்கு தன்னை நகர்த்த புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு அதுக்கு முக்கியமாக தேவைப்பட்டது ..அதுக்காக வில்லங்கத்துக்காகவே பல படங்களில் ஈழத் தமிழர் பற்றிய வசனங்கள் புகுத்தப்பட்டது ..ஈழம் பற்றி பாமெடுக்கிறோம் ஈழத் தமிழ் கதைக்கிறோம் என்று என்னவெல்லாமோ செய்தார்கள் ..செய்கிறார்கள் ஒரு படம் வெளியாகும்போதே முதலில் அதன் வெளிநாட்டு சாட்டிலைட் உரிமையை முதலாவதாக விற்க முயற்சிக்கிறார்கள்
அதே போலதான் தொலைக்காட்சிகளும் தங்களை வளர்த்துக்கொள்ள ஈழத் தமிழர்களை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம் ..எந்த நிகழ்ச்சியானாலும் ஊரிலிருந்தோ வெளி நாட்டிலிருந்தோ யாரோ ஒரு ஈழத் தமிழரை நிகழ்வில் சேர்த்து விடுகிறார்கள் .நல்ல விடயம் தான் .. ஈழத் தமிழர்களின் திறமைகளும் வெளி வரவேண்டும் ..அதே போலத்தான் இப்போது பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஊரிலிருந்து இரண்டு ஈழத் தமிழர்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள் ..வாழ்த்தி வரவேற்கிறேன் ..
ஆனால் தமிழகமெங்கும் உள்ள அகதி முகாம்களில் சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்குள்ளும் திறமைகள் இருக்கும்.இருக்கிறது .. அவர்கள் வெறும் சிலோன் கார நாய்களாகவே வாழ்த்து முடித்து விட்டு போகாமல் அவர்களிலும் தேடி வெளிக்கொண்டு வந்தால் உங்கள் வியாபாரமும் நிச்சயமாக வளம் பெறும் ..அவர்களும் வெளிச்சத்துக்கு வருவார்கள் ..
குறிப்பு -நன்றி சாத்திரி டொமினிக் ஜீவா அவர்களின் உரையை கேட்டது போலுள்ளது !மீண்டும் நன்று !!
நன்றி
Vinotharan Nadarajah

கருத்துகள் இல்லை