தடுமாறும் தேசியமும் தமிழ் தேசியக்குட்டமைப்பின் பச்சோந்தி அரசியலும்!!

 (தொடர் 6)
தமிழ் தேசிய கூட்டமைப்பு  வபக்கு கிழக்கு பகுதிகளில் ஆதிக்க சமுகங்களுக்கு மட்டுமே தங்களது சுயலாப அரசியலுக்காக ஆதரவுகளை வழங்கி வருகின்றது.

உதாரணமாக திருக்கேதிஸ்வர வளைவு உடைப்பு பிரச்சினை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினகளாகிய செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் குறித்த விடயத்தை சரிவர அணுகி இந்து மற்றும் கத்தோலிக்க மக்களிடையே  ஒற்றுமை ஏற்படுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

இதே வேளை செல்வம் அடைக்கலநாதன் வளைவு உடைப்பு விடயத்தில் பாரளுமன்றத்தில் உண்மைக்கு புறம்பான உரை ஒன்றை சுயலாப அரசியலுக்காக நிகழ்த்தி மேலும் இந்து மக்களின் மனங்களில் வேதனையை விதைத்து

மேலும் குறித்த வளைவுடைப்பு வழக்கை நடுநிலைமையோடு அணுகவேண்டிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களாகிய பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் மற்றும் பிரமூஸ் சிராய்வா ஆகியோர்கள் கத்தோலிக்க மக்கள் சார்பில் ஆஜராகி இருந்தமையை குறிப்பிடத்தக்கது

இன்று முன்னாள்  ாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு இந்து மக்களை தேரரகளின் உதவியை கோரும் நிலைக்கு தள்ளியுள்ளது இது தமிழர்கள் இருப்புக்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது ஒன்று

இதேபோல் கடந்த உள்ளாட்சி. தேர்தலில் வட்டார முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது இதன் பொழுது கூட்டமைப்பு  ஒவ்வொரு வட்டாரத்திலும் அதிக செல்வாக்கு செலுத்தும் சாதியினரை சேர்தவர்களையே கூட்டமைப்பு வட்டார வேட்பாளராக தெரிவு செய்து மக்களின் மனங்களில் இருந்து அழிக்ப்பட வேண்டிய சாதியத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

உதாரணமாக வரணிபிரதேசத்தில் கோவில் ஒன்றில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர்களுக்கு தேர் இழுக்கும் உரிமை மறுக்கப்பட்டது இந்த விடயத்தில் கூட்டமைப்பு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர் இழுக்கும் உரிமையை ஏன் பெற்றுக்கொடுக்கவில்லை அந்த கோயில் அமைந்துள்ள பகுதியில் உள்ள மேட்டுக்குடி சமுகத்தின் வாக்குகள் கூட்டமைக்கு கிடைக்காது எனபதாலாகும்

இதேவேளை மலையகத்தில் இருந்து வன்னியில் குடியேறி ஈழப்போரட்டத்தில் பங்கேடுத்த மக்களை கேவலாமாக கூறிய ஒரு கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

எனவே மதவாதம் சாதியம் இரண்டிற்கும் கூட்டமைப்பு சாவுமணி அடிக்காது தமிழ் மக்களை மதம் மற்றும் சாதியத்தில் சுயலாப அரசியலுக்காக பிரித்து அரசியல் செய்வார்கள் ஆயின் இனி வருங்காலத்தில் பல தேரர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை காப்பாற்றுவேம் என்ற போர்வையில் தமிழினத்திற்குள் உள்வருவது உறுதி

தொடரும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.