பிக் பாஸ் வீட்டுக்குள் இவங்கயெல்லாம் போனா செம்ம கலாட்டா தான்!!

பிக் பாஸ் குறித்த கேள்விக்குச் சுவாரசியமான முறையில் பதிலளித்துள்ளார் நடிகை தமன்னா.
நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்  நடிகை தமன்னா. இவர் நடிப்பில் தற்போது தேவி 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்குப் பெற்ற அளித்துள்ளார். அதில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, பிக் பாஸ்  நிகழ்ச்சியை நீங்க தொகுத்து வழங்கினால் உங்கள் நண்பர்களில்  யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புவீங்க? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'ஸ்ருதிகாசன், காஜல் அகர்வால், தனுஷ், விஷால், கார்த்தி' எனக் கூறியுள்ளார். 

மேலும் தன்னை பற்றி வரும் வதந்திகளைத் தான் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை என்று கூறிய தமன்னாவிடம்  உங்களைப்  பற்றி நீங்களே ஒரு வதந்தி கிளப்ப வேண்டும் என்றால் என்ன வதந்தியைப் பரப்புவீர்கள் என்று கேட்டதற்கு, சற்று யோசிக்காமல், 'தமன்னா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்' என்று கூறுவேன் என்றார். 

No comments

Powered by Blogger.