முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் பலி!!

எல்ல - வெல்லவாய வீதியில் ராவணா எல்ல பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்தில் 4 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில்  36, 28 வயதான பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

350 கிலோ மீற்றர் ஆழமான பள்ளத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ஏற்படும் போது முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்ததாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அத்துடன்  முச்சக்கரவண்டி சாரதி கட்டுபாட்டை இழந்தமையால் குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான  4 பேர் பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.