பெயரை மாற்ற வேண்டாம், அந்த பெயரே இருக்கட்டும்!!

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இருப்பதே சிறந்தது’ என்று, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் பிரபு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். 'அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; நடிகர் சங்க கட்டடத்தை கட்ட வேண்டும். நடிகர் சங்க கட்டடம் என்பது நடிகர் சிவாஜியின் கனவு; வெற்றி பெறுவோர் அதை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக நடிகர்கள் ஒரு தாயின் மக்கள் போன்றவர்கள்தான். அதனால், தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இருப்பதே சிறந்தது. நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் ’ என்றும் மேலும், அப்பேட்டியில் நடிகர் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.