கடல் உணவு ஏற்றுமதியில் சாதிக்கும் தமிழகம்!

சென்ற நிதியாண்டில் தமிழகத்திலிருந்து ரூ.3,505.10 கோடி மதிப்பிலான கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014-15 முதல் 2018-19 வரையிலான நிதியாண்டுகளில் இந்தியாவின் கடல் உணவுகள் ஏற்றுமதி குறித்த விவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஷ் கோயல் ஜூன் 26ஆம் தேதி மக்களவையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, 2018-19 நிதியாண்டில் இந்தியா மொத்தம் 4,62,857 டன் அளவிலான கடல் உணவுகளை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.23,889.26 கோடியாகும். டாலர் மதிப்பீட்டில் இதன் மதிப்பு 3,463.06 அமெரிக்க டாலர்களாகும். 2014-15ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 2,89,926 டன் அளவிலான கடல் உணவுகளை ரூ.18,489.54 கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்திருந்தது. 2015-16ஆம் ஆண்டில் 3,01,360 டன்னும், 2016-17ஆம் ஆண்டில் 3,59,702 டன்னும், 2017-18ஆம் ஆண்டில் 4,31,277 டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இவற்றின் ஏற்றுமதி மதிப்பு முறையே 2015-16ஆம் ஆண்டில் ரூ.16,332 கோடியாகவும், 2016-17ஆம் ஆண்டில் ரூ.20,817.04 கோடியாகவும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.24,443.84 கோடியாகவும் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2014-15ஆம் ஆண்டில் 51,343 டன்னை ரூ.3,275.23 கோடிக்கும், 2015-16ஆம் ஆண்டில் 48,139 டன்னை ரூ.2,590.02 கோடிக்கும், 2016-17ஆம் ஆண்டில் 46,936 டன்னை ரூ.2,582.43 கோடிக்கும், 2017-18ஆம் ஆண்டில் 70,526 டன்னை ரூ.3,729.47 கோடிக்கும் தமிழகம் ஏற்றுமதி செய்திருந்தது. 2018-19ஆம் ஆண்டில் சற்று குறைந்து 70,152 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3,505.10 கோடியாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.