இஸ்லாமிய தீவிரவாதிகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது!!📷

சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்ட தீவிரவாதிகளின் உடல்களை மரபணு பாிசோதனைக்காக இன்று தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றது.
அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை செய்துக் கொண்ட சந்தேகநபர்களின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நான்கு உடற் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சடலத்தின் உடற்பாகங்கள் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது ‘சுனாமி கிராமத்தில்’ உள்ள வீடு ஒன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.