சர்ச்சையைக் கிளப்பும் சந்தானத்தின் ‘டகால்டி’!

டகால்டி படத்தின் போஸ்டர் குறித்து எழுந்த விமர்சனத்துக்கு சந்தானம் பதிலளித்துள்ளார்.


ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கும் டகால்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு சில தினங்களுக்கு முன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.

போஸ்டரில் சந்தானம் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படத்தின் போஸ்டரில் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிராக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு முன்பாக ரஜினி, விஜய் ஆகியோர் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பது குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். ஆனால், சந்தானம் நடிக்கும் படத்தின் போஸ்டரில் அதே போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பினும் அதுகுறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம் தன்னை வெற்றிகரமான கதாநாயகனாக நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், கதாநாயகன் என்றால் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டுமா, அதைப் படத்தின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தவேண்டுமா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்தச் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில், “டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்த உள்நோக்கமுமின்றி பதிவேற்றப்பட்டுவிட்டது. உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை புரொமோட் செய்யும்படியாக அமைந்திருப்பதைப் பின்னரே உணர்ந்தோம். இனிவரும் என் படங்களில் இதுபோன்ற போஸ்டர்கள் கட்டாயம் இடம் பெறாது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், சர்ச்சைக்குரிய அந்த போஸ்டரை சந்தானம் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.