யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடம் அங்குரார்பணம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் அங்குரார்பண வைபவம் திருமதி சுகந்தினி முரளிதரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
குறித்த நிகழ்வு பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ச.பாலசந்திரன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..


Powered by Blogger.