கிளிநொச்சியில் சமுர்த்தி நிவாரண படிவம்.!!📷

கிளிநொச்சியில் 13073 பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வு இன்று 3 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13073 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் இன்று முதல் கட்டமாக 4500 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில்,மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய கிளிநொச்சி சமுர்த்தி பணிப்பாளர் ஆரனி தவபாலன் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முதல் கட்டமாக இன்று கிளிநொச்சியில் 4500 பேருக்கு சான்றிதள் வழங்கி வைக்கப்பட்டது.

ஏனையோருக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.