ஊடகவியலாளர் பி.உமாச்சந்திரா எழுதிய ‘அணிகலன்’ நூல் வெளியீடு!!📷

ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய ‘அணிகலன்’ நூல் வெளியீட்டு விழா  (02.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை, La Villa Cesar, 21 bis, Rue de Villeneuve, 94150 Rungis, France இல் நடைபெற்றது.



அணிகலன் நூல் வெளியீட்டு விழாவில் திரு. பாலசுப்பிரமணியம் பிரபாகரன் வரவேற்புரை மற்றும் தலைமையுரை ஆகியவற்றை வழங்கியதுடன், நூல் ஆய்வுரையை ஆசிரியர் திரு. சிவசுப்பிரமணியம் சேத்திரபாலன் ஆற்றினார். அணிகலன் நூல் முதற் பிரதியை திரு. தம்பிராசா பரமானந்தம் பெற்றுக் கொண்டதுடன், ஆசிரியர் திரு. தம்பிராசா பரமேஸ்வரன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்ட பின்னர் வாழ்த்துரைகள் இடம்பெற்றன. திரு. தம்பிராசா பரமானந்தம், திருமதி. செல்வராணி முகுந்தராஜா, திரு. ஸ் ரீபன் ஜெயசீலன், திரு. தங்கராஜா கேசானந்தன், திரு. ரீ. தயாபரன், திரு. செல்லத்துரை முகுந்தராஜா, திருமதி. செல்வேஸ்வரன் நேசகுமாரி மற்றும் திரு. துரைராஜா ஆகியோர் வழங்கினார்கள்.

ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், 2009 ஆண்டு பிற்பகுதியில் வீரகேசரி ஊடாக எழுத்துத்துறையில் கால்பதித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை, பேராசிரியர் எஸ்.பத்மநாதன், பேராசிரியர் பி. புஷ்பரட்ணம் மற்றும் தமிழ் அறிஞர்கள் பலரின் காத்திரமான வழிகாட்டல்கள் ஊடாக கலைக்கேசரி மாதாந்த சஞ்சிகை மூலம் தமிழ் அச்சு ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை அவர் பிடித்தார்.

உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய பெட்டகம், நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில், The Discover Jaffna ஆகிய நூல்களின் வரிசையில் நான்காவது நூலாக அணிகலன்  இடம்பெறுகிறது.

இலங்கையின் புகழ்பூத்த ஆன்மீக சொற்பொழிவாளர் அமரர் வசந்தா வைத்தியநாதன் அம்மா வாழ்ந்த காலத்தில், நூலாசிரியருக்கு வழங்கிய  வழிகாட்டல்களையும் தகவல்களையும் மிகச் சரியாக கையாண்டு அணிகலன் நூலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.

தமிழர் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறும் கலை, கலாசார, பண்பாட்டு விடயங்களுடன் கூடிய  தமிழர் பாரம்பரிய நகைகள், அணிகலன்கள், ஆபரணங்கள் தொடர்பிலான கிட்டத்தட்ட 20 கட்டுரைகளை உள்ளடக்கி அணிகலன் நூல் அமைந்துள்ளது.

காலத்தின் தேவை கருதி வெளியிடப்படும் அணிகலன் நூல் வெளியீட்டு விழாவை, தமிழர் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வியலில் ஆர்வம் கொண்ட பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.