அமைச்சரவையில் நடந்த இன்னொரு மோதல் கலந்துரையாடல்!!

அமைச்சர் மனோ கணேசன்
நிதியமைச்சரும், பெருந்தோட்ட அமைச்சரும் ஐம்பது ரூபா தொடர்பில் பந்து விளையாடுகிறார்கள். தோட்ட தொழிலாளருக்கு விசேட கொடுப்பனவு ஒருநாளைக்கு ஐம்பது ரூபா தருவதாக ஏப்ரல் மாதம் பிரதமர் ஒப்புக்கொண்டார். பின் அவர் அதை பெருந்தோட்ட அமைச்சரிடம் ஒப்படைத்தார். பின்னர் பெருந்தோட்ட அமைச்சர், அதை நிதியமைச்சரிடம் ஒப்படைத்தார்.

மூன்று மாதம் ஆகி விட்டது. சம்பளத்துக்கு மேலதிகமாக ஒருநாளைக்கு கொடுப்பனவு ஐம்பது ரூபா என்றால், 30 நாளுக்கு 1,500 ரூபா கிடைக்கும். ஆனால், 30 நாள் வேலை கிடையாது. 20 நாள் வேலை என்றால் 1,000 ரூபா மேலதிக கொடுப்பனவு கிடைக்கும்.
இது அரசாங்கம் சார்பாக பிரதமர் தந்த வாக்குறுதி. இதை தர முடியாது என்றால், சொல்லி விடுங்கள். நாம் தோட்ட தொழிலாளர்களிடம் கூறி விடுகிறோம்.
இந்த தொகையை எப்படி தருவது என பிரச்சினை இருப்பதாக பெருந்தோட்ட அமைச்சர் நவீன் கூறினார். இதை நாம் வீடு வீடாக சென்று ஒவ்வொரு தொழிலாளியிடமும் கொடுக்க முடியாது.
தோட்ட நிறுவனங்களின் சம்பளத்துடன் அவர்கள்தான் இதையும் சேர்த்து கொடுக்க வேண்டும். அதற்குரிய தொகையை அரசு நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்.
இதை செய்ய தோட்ட நிறுவனங்கள் மறுப்பதாக நவீன் சொல்கிறார். மறுத்தால், போக சொல்லுங்கள். பெருந்தோட்ட அமைச்சர் நவீன் எப்போதும் தொழிலாளர்களை விட தோட்ட நிறுவனங்களின் நலனை தான் முக்கியமாக கருதுகிறார். இதை அவர் நிறுத்த வேண்டும்.
அமைச்சர் திகாம்பரம்
ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தோட்ட தொழிலாளர் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். அவற்றை வாங்கி நல்லாட்சியின் ஜனாதிபதியும், பிரதமரும் உருவானார்கள். இதற்கு பின் ஓட்டு கேட்டுக்கொண்டு தோட்டங்களுக்கு வராதீர்கள்.
பிரதமர் ரணில்
உண்மை. தாமதம் ஆகி விட்டது. பெருந்தோட்ட அமைச்சர் நவீன் நாடு திரும்பிய உடன் ஒரு வாரத்தில் இதை ஏற்பாடு செய்கிறேன்.
அமைச்சர் மனோ கணேசன்
இப்படியேதான் ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள். ஆனால், தொடர்ந்து நிதியமைச்சரும், பெருந்தோட்ட அமைச்சரும் ஐம்பது ரூபா தொடர்பில் பந்து விளையாடுகிறார்கள்.
பிரதமர் ரணில்
இல்லை. இந்த முறை அமைச்சர் வந்ததும் நடவடிக்கை எடுக்கிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.