கோமாவில் நேசமணி! வடிவேலுவை வெளுத்துக்கட்டும் இயக்குநர் நவீன்!!

புலிகேசி படத்தைப் பற்றி நடிகர் வடிவேலுவின் பேச்சைக் கண்டித்து இயக்குநர் நவீன் ட்விட்டரில் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் நேசமணி டிரெண்டிங்கில் இருந்த போது நடிகர் வடிவேலு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் இருபத்திமூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றிக்கு தானே காரணம் என்றும் சிம்புதேவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லியிருந்தார்.

அவன் சின்னப்பையன், ஷங்கர் சிஜி டைரகடர் இருவரும் என் நோக்கில் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க விடவில்லை என புகார் கூறியிருந்தார். இதற்கு ஷங்கர் தரப்பிலும், சிம்பு தேவன் தரப்பிலும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

தயாரிப்பாளர் சங்கம் 24ம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் வடிவேலு மீது ரெட் கார்டு போட்டிருக்கிறது. இயக்குநர் ஷங்கரும் சிம்புதேவனுக்கு ஆதரவாகவே இருந்தார். இந்நிலையில் வடிவேலுவின் குற்றச்சாட்டு பெரிதாக பேசப்பட்டது.


இந்நிலையில் தற்போது சிம்புதேவனிடம் உதவியாளராக பணியாற்றி மூடர்கூடம் படம் மூலம் இயக்குநரான நவீன் தன் குருவுக்கு ஆதரவாக வடிவேலுவை தாக்கி டிவிட்டரில் #NesamaniInComa மற்றும் #NesamaniStayInComa எனும் ஹேஷ்டேக்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அவர் ட்விட்டரில் எழுதியுள்ள தொடர் பதிவுகள்:

அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை.

சிம்பு
ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது 


உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் ஷங்கர் இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் 


புலிகேசி இன்டர்வெல் சீன்ல வி.எஸ். ராகவன் 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் பிளாப் என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார். 


23ஆம் புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நீங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர். 


வடிவேலு எனும் மகா கலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் சிம்புதேவன் சார் மற்றும் நான் பெரிதாக மதிக்கும் இயக்குநர் ஷங்கர் சார் பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. 


புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் பவுண்ட் ஸ்கிரிப்ட் (bound script) படித்து புல்லரித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்‌ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை. 


24ஆம் புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்.  
Powered by Blogger.