அரச இலட்சினையைப் பயன்படுத்தி நிதி சேகரித்தவர் வசமாக சிக்கினார்!!
பொன்னாலையில் உள்ள எனது வீட்டிற்கு இன்று (21) மதியம் சேவை அமைப்பு என்ற பெயரில் நீரிழிவு நோயாளர்களுக்கு நிதி சேகரிப்பதற்கு என வருகை தந்த ஒருவரின் ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கு முற்பட்டபோது அவர் போலி ஆசாமி என்பது தெரியவந்தது.
அவரில் குற்றம் காண்பதற்காக அன்றி, உண்மையான நோயாளர்களின் விபரங்கள் அவரிடம் இருந்தால் அதற்கேற்ப வேறு நபர்களின் உதவியைப் பெற்று வழங்கலாம் என்பதற்காக ஆவணங்களைக் காண்பிக்கக் கோரியபோதே அவர் வசமாக மாட்டிக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் தமது அமைப்பு உள்ளது எனவும் தாம் சேகரிக்கும் பணத்தை அங்கு சென்று வழங்குவார் எனவும் பின்னர் அவர்கள் குறித்த நிதியை நோயாளர்களுக்கு வழங்குவார்கள் எனவும் இந்த நபர் கூறியிருந்தார். அமைப்பின் தொடர்பிலக்கத்தைக் கேட்டபோது அவரால் வழங்க முடியவில்லை.
எனினும், அவரில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது தொடர்பிலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரைப் புகைப்படம் எடுத்த பின்னர் எனது தொடர்பிலக்கத்தையும் அவரிடம் கொடுத்து நேற்று மாலை 5.00 மணிக்குள் அவரது அமைப்பின் இயக்குநரை என்னுடன் தொடர்புகொள்ளவைக்குமர்று கூறினேன். இனி ஒரு ரூபாவும் சேர்க்காமல் உடனடியாக திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தேன்.
சென்றவர் சில மணி நேரங்களின் பின்னர் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி அமைப்பு என்று எவரும் இல்லை எனவும் தானே போலியாக ஆவணத்தைத் தயாரித்து மோசடி முறையில் நிதி சேர்த்தார் என ஒப்புக்கொண்டார்.
நேற்று இரவிரவாக எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தான் சேர்த்த பணம் முழுவதையும் என்னிடம் ஒப்படைப்பார் எனவும் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அரச இலட்சினை மற்றும் அரச பதவிப் பெயர்களை வைத்து அவர் மோசடி செய்திருக்கின்றார். அவருக்கு முறையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடிதத் தலைப்புடன் யாழ்.மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் எவராது நிதி சேகரித்தால் அவர்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்.
அரச இலட்சினையைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினர் முன்வந்தால் அவர் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை