சில மனங்களின் ஒரு தலை ராகம் .!!


மௌனக்கடலினுள் மனம் அமிழ்ந்துவிடும்
பொழுதெல்லாம் ஆழ்கடல் பரப்பினிலே
கரையோரமாய் புதைந்து எழுகிறேன்

அதோ! அந்த நேரம் தொடுகோடுகளை
இணைத்துக்கொண்டிருக்கிறது  தொடுவானம்
கடல் மடியை தொட்டுவிடத்தான் முயன்று
கொண்டிருக்கிறதோ பாவம் ....!

அதன் வியர்வைத்துளி தான்
சொட்டுச்சொட்டாக
கடலடியில்  உப்பாக உறைகின்றதோ
இதோ..!இந்த கடலலையும் சில மனவலைகள்
போலவே எதையோ ஸ்பரிசிக்க
எத்தணித்து பரிதவிக்கிறது

இறுதியிலே இரண்டுமே
ஏமாற்றத்தின் சுவாசத்தையே
ஸ்பரிசிக்க போகின்றன
சில மனங்களின் ஒரு தலை ராகம் போலவே.......!

ரேகா
08.06.2019

No comments

Powered by Blogger.