துணை நடிகை ஷாலு பாலியல் மீ டூ புகார்!!
துணை நடிகை ஷாலு பாலியல் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.
திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் கடந்த ஆண்டு எழுந்த மீ டூ இயக்கத்தின் மூலம் வெளியே வந்தன. இந்தி, மலையாளம் ஆகிய திரையுலகங்களைப் போல் இங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிதாக ஆதரவுக்கரம் நீளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் அதுபற்றிய பேச்சுக்களும் குறைந்தன.
தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஷாலு பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் ஷாலு. திரைத்துறையில் நீங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷாலு, “நானும் இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இதுகுறித்து புகார் அளிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இதை எப்படி கையாளவேண்டும் என்று எனக்கு தெரியும். ஒருவேளை நான் புகார் அளித்திருந்தால் அதனால் என்ன பயன்? எதிர்தரப்பினர் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
சமீபத்தில் விஜய தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குநர் ஒருவர் படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்தார்” என்று கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை