தக்கன பிழைத்தல்(survival of the fittesT) தலைசிறந்த சானக்கியம்.!!

இயற்கையே மனிதனுக்கு அனைத்தையும் கொடுக்கிறது, அனைத்தையும் கற்றும் கொடுக்கிறது. இயற்கையில் இருந்துதான் எல்லாவிதமான படிப்பினைகளையும், தத்துவங்களையும், பொறிமுறைகளையும் பெற்றுக்கொள்கிறான். இயற்கையில் இருந்து பெறுகின்ற சமன்பாடு ஒன்றை மனிதன் வாழ்வில் சரியான முறையில் பிரயோகம் செய்தால் நிச்சயம் அதற்கான உத்தம பயன்பாட்டை அவனால் பெற்றுக்கொள்ள முடியும்.


இந்த புவியன் படைப்பும் உயிர்களின் படைப்பும் அவற்றின் வாழ்தல் நிலைத்தல் என்பவற்றை உள்ளடக்கிய இயங்குநிலையிலும் இருத்தல் கோட்பாடு மிக முக்கியமானது.

வாழ்தலில் தக்கன பிழைப்பனவே தொடர்ச்சியறாது வாழ்கின்றன அப்படி பிழக்க முடியாதவை அழிவடைந்து விடுகின்றன.

ஒரு உயிராக தன்னை உருவகித்து கொண்டு தமிழினம் இனவழிப்புக்கெதிராக தக்கன பிழைக்க  கற்றுக்கொள்ளவேண்டும் தவறும் பட்சத்தில் எந்த எச்சமும் இல்லாமல்,  இனவழிப்பில் எஞ்சியுள்ள மிச்சமும்  அழிவடைந்துவிடும்.

எந்தெந்த வழியில் நாம் தப்பிப்பிழைத்து தக்கன வாழ்தலுக்கான தகுதியை வளர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு சிக்கலான இந்த உலகில் நமது இருப்பை பாதுகாத்துகொள்ள முடியும்.

இது சுயலநலன்மிகுந்த ஒரு இயற்கை இயங்கு விதி இருந்தும் இதை அனுசரித்துச்செல்லாவிடில் இந்த பொறிமுறையே நம்மை அழித்துவிடும்.

கல்முனையில் தமிழர்கள் தக்கன பிழைக்க வேண்டும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.