பசுமைச்சுவடுகள் தாளையடிக் கடற்கரையில் சூழல் பாதுகாப்பு செயற்திட்ட பணி!📷

தாளையடிக் கடற்கரை பகுதியில் திட்டமிடப்பட்டிருந்ததன் படி மாலை மூன்று மணியளவில் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. கடற்கரையை சூழவுள்ள  குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் பரவிக்காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற சூழலிற்கு ஒவ்வாதபொருட்களை இனங்கண்டு பிரதேச மக்களின் பங்களிப்புடன் உரப்பைகளில் சேகரிக்கப்பட்ட கழிவுகளோடு, ஏற்கனவே அங்கு குவியலாக்கப்பட்டு காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன் குப்பைகளையும் சேர்த்து பருத்தித்துறை பிரதேச சபைக்கான வாகனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.துப்பரவிற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தின் பின் கடற்கரை ஓரத்தில் நின்ற ஆலமர நிழலில் கலந்துரையாடல் ஆரம்பமானது. பசுமைச்சுவடுகள் அமைப்பின் அறிமுகம், இதுவரை எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள், சூழலியல் சார் விடயங்களில் அனைவரும் கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வின் தேவைப்பாடுகள், கடற்சூழல் சார் பிரச்சினைகள்,  பிளாஸ்ரிக் பொலித்தீன் போன்ற சூழலிற்கு ஒவ்வாத பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்தலுடன், கூடியளவில் வாழ்வியல் நடைமுறைக்குள் அவற்றை உள்வாங்குதல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக இஞ்சித்தேநீர் அனைவருக்கும் பரிமாறப்பட்டு, தாளையடிக் கடற்கரை சுத்தம்செய்தலும், கலந்துரையாடலும் செயற்பாடு நிறைவுற்றது.

-பசுமைச் சுவடுகள்-

As planned the event was commenced in the thalaiyady costal area at 3 o' clock. The Non-biodegrable things including plastic and polythene were, which had been spread around the costal area, gathered with the contribution of local peole. Both these Non-biodegrable things and the heap of plastic and polythene, those had been already there, were handed over to pradesiya shaba vehicle.

The discussion was commenced underneath of the shadow of the banyan tree after the cleanup time. The introduction of the pasumaich suvadukal organization, the activities which have been carried by the organisation so far, the necessary of awareness regarding to environmental matters, the issues related to costal areas, controling polythene and plastics were discussed.

Eventually, the ginger tea was catered to everyone; the the event clean-up the thalaiyady coastal area and the discussion came to end.

-pasumai suvadukal-

Contact number :- 0762073333 /0776385805

Translated by - kandeepan

No comments

Powered by Blogger.